தமிழ்த்தேசிய எழுச்சிநாள் பொதுக்கூட்டம்!

வருகிற 25.02.2020 செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் செங்கிப்பட்டி (சானூரப்பட்டி) முதன்மைசாலையில் தமிழ்த்தேசிய எழுச்சிநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது!


கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் கால வோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது வரலாற்றின் இயங்கியல் என்பர் அறிஞர்கள்!

  திருப்புமுனை என்று சொல்லிக் கொள்ளாமலே சில மாநாடுகள் திருப்பு முனையாக அமைந்து விடுவதுண்டு.

  அப்படித்தான் 1990 பிப்ரவரி 25 ஆம் நாள் நடந்த தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு அமைந்து விட்டது. “தமிழ்த் தேசியம்’’ இப்போது தனித்தன்மையுள்ள ஒரு கருத்தியலாக வளர்ந்துள்ளது. ஒரு கருத்தியலாக மட்டுமின்றி அதற்கான அமைப்பு வலிமையும் வளர்ந்து வருகிறது. இதற்கான அடித்தளமிட்டது 1990 பிப்ரவரி 25 மாநாடு!

இன்று ஏராளமான தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளன.

எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசம் தமிழ்த் தேசம்
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது இலட்சியம்

என்று வரையறுக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்நாடு விடுதலையை அறிவிக்கப்பட்ட இலட்சியமாகக் கொள்ளாத எந்த அமைப்பும் தமிழ்த் தேசிய அமைப்பு ஆகாது என்பதே துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு!

1990-லிருந்து தொடர்ந்து தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்து வரும் வாய்ப்பையும் அதனை அடிப்படை இலட்சியமாகக் கொண்ட வேலைத் திட்டங்களைச் செயல்படுத்திய பட்டறிவையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்திற்கு வரலாறு வழங்கியது.

இதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்த்தேசியப்பேரியக்கம் பூதலூர் ஒன்றியம் சார்பாக செங்கிப்பட்டி (சானூரப்பட்டி) முதன்மைசாலையில்

 தோழர் . பி.தென்னவன் தலைமையில் தமிழத்தேசிய எழுச்சிநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதுசமயம் தமிழினஉணர்வாளர்களும் விவசாயிகளும் இப்பகுதியில் உள்ள இளைஞர்களும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு உங்களை அன்புரிமையுடன் அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம். பூதலூர் ஒன்றியம்.
Blogger இயக்குவது.