காதல் திருமணம் குறித்து வினோத் பாபு!!

காதலர் தினமான இன்று தன் காதல் கல்யாணம் குறித்து பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார், வினோத் பாபு.


`` இது திடீர் கல்யாணம் எல்லாம் கிடையாது. ஐந்து வருட நட்பு, காதல் எங்களுடையது. நண்பர்கள், உறவினர்கள் ஆசீர்வாதத்தோடு இப்போ திருமணப் பந்தத்தில் இணைஞ்சிருக்கோம். அவங்க பெயர் சிந்து. ஐந்து வருடம் முன்னாடி ஒரு நிகழ்வில் மீட் பண்ணோம். அந்த நிகழ்ச்சியில் நான் தொகுப்பாளர், அவங்க ஒருங்கிணைப்பாளர். அங்கதான் நட்பானோம். அவங்க காலேஜ் புரொஃபசர். எனக்கு அவங்கள ரொம்பப் பிடிச்சிருந்தது. காதலில் விழுந்துட்டேன். அவங்களுக்கும் என்னைப் பிடிக்கும். நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.’’

``ஒருகட்டத்துல காதலைச் சொல்லிடலாம்னு முடிவு பண்ணி அவங்களுக்குப் போன் பண்ணேன். ஆனா, அவங்களுக்கு என் மேல காதல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அதனால, எனக்குப் பொண்ணு பார்த்திருக்கிறதாவும் அவங்க வந்து அந்தப் பொண்ணை பார்க்கணும்னு போன்ல சொன்னேன். அவங்களும் அதை நம்பி நேர்ல வந்தாங்க. அவங்க முகத்துல ஒரு தவிப்பு தெரிஞ்சது. என் மீது இருக்கும் காதலை அவங்க கண்கள்ல பார்த்தேன். அவங்க அந்தப் பொண்ணு எங்கன்னு கேட்டாங்க. அந்தப் பொண்ணே நீ தான்மான்னு அசடு வழிஞ்சேன். அப்புறம் என்ன ஒரே லவ்வுதான்.’’

``என்னோட கடினமாக சூழல்களில எல்லாம் என்கூடவே இருந்தாங்க. ரொம்ப சப்போர்ட்டிவ். பெஸ்ட் ஃப்ரெண்டே வாழ்க்கை துணையா வர்றதெல்லாம் வரம். எனக்கு அந்த வரம் கெடச்சிருக்கு. ஐந்து வருட காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துப் போகணும் இல்லையா. அதான் நண்பர்கள், உறவினர்கள் ஆசியோட திருச்சி, வயலூர் கோயில்ல இரண்டு நாள்கள் முன்னாடி திருமணம் பண்ணிக்கிட்டோம்’’ என்றார் உற்சாகத்துடன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.