7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு!!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
இதுவரை காலமும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே விமான சேவைகள் இடம்பெற்றுவந்த நிலையில் எதிர்வரும் வாரத்தில் 7 நாட்களும் சேவையை ஆரம்பிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மானிப்பாய் வீதியிலுள்ள யாழ்ப்பாண வணிகர் கழகத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூகையில், “யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ளன. ஆயினும் அந்தச் சேவைகள் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே இடம்பெற்றன. இந்நிலையில் பலரதும் கோரிக்கைகளுக்கு அமைய பயணிகளுக்காக இந்த சேவை இன்னும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 27 ஆம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை விமான சேவையில் ஈடுபடும் நிறுவனமே எமக்கு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை நாம் மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
இங்கு புதிதாக அமைக்கப்பட்ட விமான நிலையத்தின் விமான சேவைகள், வர்த்தக்கர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் அதன் சேவைகள் இன்னும் அதிகரிப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் பல வழிகளிலும் நன்மையை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.
இதேவேளை, எமது நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்த விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற அதேநேரத்தில் காங்கேசன்துறை துறைமுககம் புனரமைக்கப்பட்டு அதனுடான கப்பல் சேவைகளையும் விரைவாக ஆரம்பிக்கவேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.
இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெனக்குமார் உள்ளிட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo