இந்தியாவில் பிச்சை எடுக்கும் பிரபல வெளிநாட்டு தொழிலதிபர்!!

கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு பக்தர்கள் இருக்கின்றனர். இதற்காகவே முன்பதிவு செய்து ஈஷா மையத்திற்கு வருகை புரிந்து தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்படி இங்கு வருபவர்களின் மனநிலை மிகவும் நன்றாக இருப்பதாகவும், மன நிம்மதியாக இருப்பதாகவும், இந்த உலகில் நாம் யார் என்பதை மிக எளிதாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவதற்கும், நம் வாழ்க்கையில் அடுத்தகட்ட முயற்சிக்கு செல்வதற்கும் மிகப்பெரிய வழியாக அமைகிறது என, இதனை முழுமையாக உணர்ந்தவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.


இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கிம் என்பவர், சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு இருந்த ஏழை எளிய மக்களுக்கு அவரால் முடிந்த அதிக உதவிகளை செய்து இருந்தார். ஆனாலும் அவருக்கு அதில் பெரிய மன நிம்மதி ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து, யாசகம் கேட்டு வருகிறார்.

அவ்வாறு பெரும் சிறிய தொகையில் உணவு வாங்கி உண்கிறார். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து அவர்கள் கொடுக்கும் ஐந்து பத்து ரூபாய் கொண்டு உணவு வாங்கி உண்டு வருகிறார். இதில் அவருக்கு மன நிம்மதி கிடைப்பதாகவும் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.