வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு ஊடக அறிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று(24) வெளியிட்டுள்ளது.


ஒருபுறம் ஓஎம்பிக்கு கால அவகாசம் வழங்கி மறுபுறம் சர்வதேச விசாரணை என்று நாடகமாடி அரசை காப்பாற்ற நாங்கள் தயாராக இல்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி, செயலாளர் மற்றும் அவ் அமைப்பின் அம்பாறை மாவட்ட தலைவி ஆகியோர் கடந்த வாரம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்பு என்னும் பெயரில் இயங்கும்  எமது அமைப்பினை மிகவும் கேவலப்படுத்தும் நோக்கோடு உண்மைக்குப் புறம்பான பொய்களை கூறி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் எமது முயற்சியை பலவீனப்படுத்தவும், சிறீலங்கா அரசின் ஓஎம்பி க்குள் முடக்கும் செயற்பாட்டை வெற்றியடையச் செய்யும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

2009ற்குப் பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சிறீலங்கா அரசிடம் நீதி கோரிப் போராடியபோதும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் ஐ.நா மனித உரிமைப்பேரவையால்  கூட நீதி பெற்றுத்தருவது சாத்தியமற்றது என்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்திற்கு நீதி பெற  ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலைப்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த எட்டு வருடங்களாக ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக உள்ளக விசாரணைக்கு சந்தற்பம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா அரசுடன் இணைந்து வலியுறுத்தி வந்துள்ளது.

அது மட்டுமன்றி அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களதும் பூரண ஆரவுடன் ஒஎம்பி அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றபோது  அப்போராட்டத்திற்கு கனகரஞ்சினி தலைமை தாங்கினார். அவரது அழைப்பின் பெயரில் அப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடைய தலைமையில் ஓஎம்பி வேண்டும் என்று கோசம் எழுப்பப்பட்டது. அவரது செயற்பாட்டிற்கு எதிராக கனகரஞ்சினி எந்தக் கருத்தினையும் இதுவரை வெளியிட்டிருக்கவில்லை.
 
கடந்த 2019 மார்ச் மாதம் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கக் கூடாதென ஐ.நா மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளினால் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப்  போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரை வழங்கிய கனகரஞ்சினி சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தார்.
அது மட்டுமன்றி உள்ளக விசாரணை சாத்தியமில்லை என்பது உணரப்பட்டு சர்வதேச விசாரணையை வலியுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதனை பலவீனப்படுத்தும் நோக்கில் கலாரஞ்சினி தலைமையிலான குழுவினர் எமது உறவுகளை காணாமல் ஆக்கியும்,  இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்திடம் நீதி கோரி வருகின்றனர். அதன் மூலம் இலங்கை அரசுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்ப்ட கால நீடிப்பை நியாயப்படுத்த துணைபோகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஓ.எம்.பியை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அம்முயற்சியை படிப்படியாக நீத்துப் போகச் செய்யும் விதமாக கனகரஞ்சினி தலைமையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் ஓ.எம்.எபி உடன் இரகசிய சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒஎம்பி அதிகாரிகளை கொழும்பில் இரகசியமாகச் சந்தித்த பின்னர் யாழ்ப்பாணத்தில் ஓஎம்பி அலுவலகம் திறக்கப்பட்டபோது கலாரஞ்சினி தலைமையிலான குழு எந்த எதிர்ப்பினையும் வெளிப்படுத்தவில்லை.

அது மட்டுமன்றி ஓஎம்பி ற்கு கால அவகாசம் வழங்குதல் என்ற பெயரில் சிலரை ஓஎம்பி யுடன் இணைந்து செயற்பட ஊக்குவித்தும் வருகின்றனர்.

உள்ளக விசாரணையே சாத்தியமில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் 2015ஆம் ஆண்டே கூறியுள்ள நிலையில்.கனகரஞ்சினி குழுவினர் ஓஎம்பி க்கு கால அவகாசம் வழங்கியுள்ளமை என்பது கோட்டா அரசை பாதுகாக்கும் செயற்பாடேயாகும்.

இது எமது உறவுகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களதும் ஆதரவுடன்  பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதனையம்  சிங்கள தேசத்திடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கப்போவதில்லை.

எனவே எங்கள் பிரச்சனையை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு பாரப்படுத்துங்கள் என்பதனையும் எம்மால் மேற்கொள்ளப்படும் ஓஎம்பிக்கு எதிரான தொடர்  போராட்ட இடத்திற்க்கு  வருகை தந்த ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம்  இதனை  நாம்  வலியுறுத்திக் கூறினோம்.

எமது அமைப்பால் மேற்கொள்ளப்படும் சர்வதேச நீதியை வேண்டிய போராட்ட அறிகைகளை ஐ.நா செயலருக்கு அனுப்பி வருகின்றோம் நாம் சர்வதேச பக்கச்சார்வற்ற விசாரணை வலியுறுத்தியே வருகின்றோம்

எமது அமைப்பால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு வருகின்ற  பெரும்பாலான  உறவுகள்  கலாரஞ்சினி குழுவின் பொய்யான முகங்களை அறிந்து உண்மையாக நீதி வேண்டி போராடுகின்ற  எங்களுடன் இணைவது அதிகரித்து வருகின்றனர்.
இதனால் கனகரஞ்சினி குழுவின்  தலைமை  பதவி நிலைகள் வங்குறோத்து  நிலைக்கு தள்ளப்படுவதனால் பதற்றமடைந்து நிலை தடுமாறி நிதானமற்ற பொய்களை ஊடகங்களுக்கு கூறிவருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக கடந்த 10 ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணையை ஆதரித்து ஓஎம்பி ற்கும் ஆதரவு வழங்குவதே காரணமாகும்.

இவ்வாறான துரோகத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடும் சீறீதரன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களுடன்  இணைந்து கனகரஞ்சினி தலைமையிலான குழு செயற்படுகின்றது.

கடந்த பெப்ரவரி 04ம் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு எமது அமைப்பினால் உத்தியோக பூர்வமாக ஒருவாரத்திற்கு முன்னதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் குறித்த தினத்தில், குறித்த இடத்தில் கறுப்புக் கொடிகளையும், சுநத்திரதினத்தை நிராகரிக்கும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் எமது அமைப்பு ஈடுபட்டது.

இந்த ஏற்பாடுகள் நடைபெற்றபோது அமைதியாக இருந்த கனகரஞ்சினி தலைமையிலான குழு  போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் அவ்விடத்திற்கு வந்து எமது போராட்டத்தை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்

எமது அமைப்பு ஏற்பாடு செய்த போராட்டத்தை குழப்பும் விதமாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டிருந்தனர்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள் என்று கைகளில் கறுப்பு கொடி ஏந்தி அரசுக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தி நாங்கள் போராடியபோது கறுப்புக் கொடிகளையும் பதாதைகளையும்  பறித்து அவற்றை காலிற்க்குள் போட்டு மிதித்தும் பதாதைகளை கிழித்து எறிந்தும் அடாவடியில் ஈடுபட்டனர்.

மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலமையிலான குழுவினர் கனகரஞ்சினி தரப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எவரும் கறுப்புக் கொடிப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அவர்களது அணியிலிருந்தவர்களில் சிலர் இவர்களது பொய்யான தோற்றப்பாட்டை அறிந்து எம்மோடு கலந்து கொண்டனர் சிலர் கலந்து கொள்ள முற்பட்ட போது அவர்களை தடுத்து நிறுத்தியமை தடுத்து நிறுத்த முயற்சித்தமை என்பன கனகரஞ்சினி தலைமையிலான குழுவின் இலங்கை அரசுமீதும் உளவு துறை மீதும் கொண்டிருந்த விசுவாசத்தை எடுத்துக் காட்டுகிறது.

எமது மக்களின் உணர்வுகளையும் வலிகளையும் மதிக்காது செயற்பட்டு ஓ எம் பி. அலுவலகம் திறக்க வழிகோலிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்குப் பின்னால் நின்று  உறவுகளை ஏமாற்றி பலர் ஓ எம் பி. யிடம் இறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக்கொள்ள துணைபோயுள்ளனர்.

தமிழ்ச் சமூகமும் ஓ.எம்.பியை நிராகரித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில்-கனகரஞ்சினி குழுவினர் அத்தனை பேரின் உணர்வுகளை மதிக்காது
ஐந்து பேரை
ஓ எம் பி. இடம் தேட கொடுத்து  இலங்கை அரசின் மீதும் அதன் உழவுத்றை மீதும் வைத்திருந்த நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளனர்


எம்மை பணத்திற்க்காக  விலை போனதாக கூறும் கனகரஞ்சினி குழுவினரால் எங்களுக்கு பணம் தந்தது யார் என்று ஆதார பூர்வமாக பகிரங்கமாக கூற முடியுமா அல்லது  நாங்கள் தங்களைப் போன்றும்  தங்களை வளிநடத்தும் கூட்டமைப்பு போன்று சிங்கள அரசிடம் விலைபோனோமா
என்பதையும் கூற முடியுமா. இது இவ்வாறு இருக்க  உங்கள் வீட்டுக்கு மதில் சுவர் கட்ட யார் பணம் தந்தது என்பதையும் கூற முடியுமா.
கனகரஞ்சினி குழுவைச்சார்ந்தவர்கள் எமது அமைப்பை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை வடக்கிலும், கிழக்கிலும் உளவுத்துறையினரை கொண்டு மிரட்டி வருகின்றனர். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுகிறார்களா? அல்லது இருக்கின்றவர்களை புலனாய்வுப்பிரிவை கொண்டு காணாமல் ஆக்க முயச்சிக்கிறார்களா?

நாங்கள் எந்தக் கட்சியையும் சாந்தவர்கள் இல்லை.  எங்களை இதுவரைக்கும் எந்த கட்சியும் வழிநடத்தவும் இல்லை. எங்கள் போராட்டத்திற்கு சர்வதேச்த்திடம் நீதியை கோருபவர்கள் யாராக இருந்தாலும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தரலாம். அவர்களை எங்கள் போராட்டங்களில் இணைத்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் தேவையாகும் .

ஆனால் உங்கள் போராட்டங்களில் சர்வதேச அரங்கில் நீதியை கிடைக்க விடாமல் தடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்பை பெற்று கொடுத்தும் இறுதிநாள் வரை 60 மேற்பட்ட தாய்மார் தந்தை மார்கள் தமது பிள்ளைகளை காணாமுடியாமல்  இறந்தார்கள் அதற்கு காரணமான கூட்டமைபின் அடிவருடிகளை அழைத்து போராடுவதும்  பாதிக்கப்பட்ட உறுவுகளை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதும் பச்சை இன துரோகமாகும்.

உள்ளக விசாரணையையும் ஓஎம்பியையும் ஆதரிக்கும் கூட்டமைப்பின் எம்பி சிறிதரன் தனது வாக்கு வங்கியை திரப்புவதற்கு நீங்கள் போராட்டம் நடாத்துவதற்காக வேறு ஒருவரது பாவனையிலுள்ள காணியில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக தனது கையாட்கள் மூலம் அடாவடியாக உங்களுக்கு கொட்டில் போட்டுத்தர முற்பட்டார் -என்றால்   கனகரஞ்சினி குழுவின் கூட்டமைப்பு மீதும் சிறிதரன் மீதும் கொண்டுள்ள வெளிப்பாடாகும்

உங்கள் போராட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் கஜேந்திரகுமார் வரும் போது நீங்கள் யாவரும்; கோமாவில் இருந்தீர்களா?

இலங்கை தமிழர் தேசத்தில் 2009 ஆயுத போராட்டம் மௌனிக்க பட்டதன் பின்னர் தமிழ் தேசிய பாதையில் உண்மையாகவும் உறுதியாகவும் நிற்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்படட உறவுகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மட்டுமே நீதி கிடைக்கும் என்பதனை எமது அமைப்புக்கள் வலியுறுத்த முன்னரே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியவரும் அவரே. அது மட்டுமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எமக்காக குரல் கொடுக்கும் ஈழத் தமிழ் தேசத்திலுள்ள அரசியல் கடசிகளில் தலைவர் என்ற பதவியிலிருந்து அங்கு 47 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் குரல் கொடுப்பவர் அவர் மட்டுமே.  அவரை போன்றவர்களை இணைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.

அவர் போன்றவர்களை எமது போராட்டத்திற்கு வரும்போது எமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவரைப் போன்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எவரும் எமது போராட்டங்களில் கலந்துகொள்ளலாம். அவ்வாறானவர்களை நாம் வரவேற்கின்றோம்.

அதற்காக அவர்கள் தான் எமது போராட்டங்களை வழிநடாத்துகின்றார்கள் என்ற பொய்களை கூறி எமது தூய்மையான போராட்டத்தின் மீது அரசியல் சாயம் பூசாதீர்கள்.

எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டத்திற்கு அவர்கள் வரும் போது போராட்டங்களை பிரித்து விட்டதாக பொய் கூறுகின்ற நீங்கள்
எம்மால் கடந்த பெப்ரவரி 4 திகதி அறிவித்த போராட்டத்தில் தோல்வி அடைந்த தங்கள் குழு உண்மைக்குப்
புறம்பான செய்திகளை  ஊடகங்களுக்கு முன் நிதானம் இழந்து உழறுவதையும் தங்கள் பதவிக்காக அடம் பிடிப்பதையும்,சிறிதரனின் வாக்கு வங்கிக்காக உழறுவதையும் அன்றைய தினம் எல்லாராலும் உணர முடிந்தது அல்லவா

உண்மையான தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை நிறுத்தி எமது உறவுகளை கண்டு பிடிப்பதற்க்காகவும் சர்வதேசத்திடமும்,ஐ நா பாதுகாப்பு சபை ஊடாக  சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் அரசை நிறுத்தி இனப்படுகொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் எமது உறவுகளை கண்டு பிடிக்கவும் உங்கள் பதிவிகளை துறந்து வரட்டு கௌரவங்களை கைவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்ற அடிப்படையில் எம்முடன் இணைந்து பயணிக்க தயாராகலாம் என்பதனை அறியத்தருகின்றோம்

இவ்வாறு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது
Blogger இயக்குவது.