அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு வருகிறது ரோமியோ ஹெலிகொப்டர்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவிற்குள் ட்ரம்ப் வருகை தந்ததன் மூலம் கிடைத்த லாபம் என்ன? பல கோடிகளை இந்தியா அள்ளி வீசியிருக்கிறது.
எனினும், அதன் மூலமாக இலாபம் ஏதும் உண்டா என்பது தொடர்பில் பல விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன சமூக ஊடகங்கள்.
ஆனாலும், ட்ரம்ப், மோடியிடையே பாதுகாப்பு துறை தொடர்பான ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது தான்.
இந்நிலையில், அமெரிக்காவின் ரோமியோ ஹெலிகொப்டர்களை (Romeo Helicopters) இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிடம் இருந்து சிக்கோர்ஸ்கி எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்களை (Sikorsky MH-60R Romeo Helicopters) இந்தியா கொள்வனவு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்படி என்ன தான் இருக்கிறது ரோமியோ ஹெலிகொப்டர்களில்?
எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் சிக்கோர்ஸ்கி ஏர்கிராஃப்ட் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் கீழ் சிக்கோர்ஸ்கி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) என்பது உலகம் முழுக்க பிரபலமாக உள்ள ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஆகும்.
இதன் கீழ் ஏராளமான துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சிக்கோர்ஸ்கி ஏர்கிராஃப்ட்.
இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்கள் அதிநவீன செயல்திறன் வாய்ந்தவை.
எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படையில் (Indian Navy) சேர்க்கப்படும். எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர்களின் வருகையால், இந்திய கடற்படையின் பலம் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் இந்திய கடற்படை நவீனமயமாகும்.
எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் திறன் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்களுக்கு உள்ளது.
எம்எச்-60ஆர் ஹெலிகொப்டர்கள் ரோமியோ என்ற பிரபலமான பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆழ்கடலில் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடுவதில், எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர் நிபுணத்துவம் பெற்றது.
தற்போதைய நிலையில், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடுவதற்கான கூடுதல் வல்லமை இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.
கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடுவதற்காக, எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்களில் ஏவுகணைகள் இருக்கும்.
ஹெல்ஃபயர் ஏவுகணைகள் (Hellfire Missiles) வழங்கப்பட்டுள்ளன.
நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் எந்த ஆழத்தில் பதுங்கியிருந்தாலும், எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்கள் மிகத் துள்ளியமாக கண்டறிந்து அழிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன.
அதிநவீன வசதிகளை எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்கள் பெற்றுள்ளன.
சென்சார்கள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்களில் வழங்கப்பட்டுள்ளன.
தேடுதல் வேட்டைக்கும் இந்த ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியும்.
மீட்பு பணிகளில் ஈடுபடக்கூடிய திறனையும், எம்எச்-60ஆர் ரோமியோ ஹெலிகொப்டர்கள் பெற்றிருப்பது சிறப்பானது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo