மன்னாரில் ஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதம்!!
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ் என்பவரே மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் வலியுறுத்தும் கோரிக்கையை முன்வைத்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் ஜேசப் தர்மன் ஆகியோர் சென்று கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 22ம் திகதி யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இரா.சம்பந்தனிடம் இந்த விடயம் குறித்து கேள்வியெழுப்பியபோது, அவர் இதைப்பற்றி பேச மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo