தொண்டைக்குள் சோடா மூடி சிக்கி ஆபத்தான நிலையில் குழந்தை!!
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மூன்று வயதுடைய சிறுவன் ஒருவருக்கு சோடா மூடி தொண்டைக்குள் சிக்கியதில் ஆபத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.அலீம் என்ற சிறுவனுக்கே இவ்வாறு சோடா மூடி சிக்கியுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
கந்தளாய் பேராறு பகுதியில் இன்று(26) மூன்று வயதுடைய குழந்தை கையில் நிறைய சோடா மூடிகளை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் தொண்டைக்குள் சோடா மூடி சிக்கியுள்ளதாகவும் அப்போது குழந்தையின் தாய் சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொண்டைக்குள் சிக்கிய சோடா மூடியை எடுப்பதற்கான சிகிச்சை நடவடிக்கைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo