அரச ஊழியர் ஒருவர் பட்டினியால் பரிதாபமாக மரணமடைந்தார்!!

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


சுப்பிரமணியம் – பத்மநாதன் என்னும் 44 வயது அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். கிளிநொச்சி கோணாவில் பகுதியில் தற்போது வசித்துவரும் குறித்த ஊழியர் யுத்த காலத்தில் இந்தியாவிற்குச் சென்று வாழ்ந்த நிலையில் 2011ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிலையில் பட்டதாரி என்ற வகையில் 2015இல் அரச நியமனம் பெற்றிருந்தார்.

நோய்வாய்ப்பட்ட தாயார், நடக்க முடியாத சகோதரன் என மிகவும் வறுமையில் வாடிய இவர் இருப்பிடம் இன்மையால் கடனைப் பெற்று அதனை அமைத்துக்கொண்டார். இவ்வாறு கடன் பெற்ற நிலையில் அதற்குரிய தவணைப் பணம் கழிக்கப்பட்டு மிகவும் சொற்ப பணமே கையில் கிடைக்கும் நிலையில் அப்பணம் வைத்திய செலவிற்கே போதுமாக இன்மையால் முறையான உணவு இல்லாத நிலையில் , கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனால் சில சந்தர்ப்பங்களில் சக ஊழியர்கள் உதவி புரிந்துள்ளனர்.

இவ்வாறு தொடர் வறுமையின் காரணமாக உணவின்றிப் பரிதாபகரமாக  கடந்த சனிக்கிழமை உயிரிழந்தவரின் இறுதிக் கிரிகைகளையும்  மற்றவர்களின் உதவிகள் மூலமே மேற்கொள்ள வேண்டிய அவலம் காணப்பட்டதோடு , இவரது சகோதரன் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்குச் சென்றால் ஒரு காலை அகற்றி விடுவர் என அஞ்சி வைத்தியசாலைக்கும் செல்ல மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஆடம்பரச் செலவிற்காக அதிக பணம் செலவு செய்யப்படும் நிலையிலும் சமூக ஆர்வலர்கள் எனவும், தொண்டு நிறுவனங்கள், பெரியவர்கஎன இயங்கும் இன்றைய நிலையில் ஓர் 44 வயதினையுடையவர் தனது குடும்பத்திற்காக தன்னை வருத்தி உயிரிழந்தமை பெரும் கொடுமையாக பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.