கொரோனா வைரஸ் - தொற்று சீனாவின் விசித்திர முடிவு!
கொரோனா ரைவஸ் பரிசோதனைக்கு முன்வந்தால் அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தொற்றத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதையும் பாதித்ததோடு, உலகில் 30 நாடுகளுக்குப் பரவி அங்கும் தன் கொடூர முகத்தை காட்டிவருகிறது. எனினும், அதன் தாக்கம் குறைவதாக இல்லை.
இதேவேளை, சீனாவிற்குள்ளும் இதன் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது. நேற்றைய தினம் அதன் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பொது மக்கள் வராமல் இருப்பது பெரும் தர்மசங்கடமாக மாறியிருப்பதுடன், சீன அரசாங்கத்திற்கு இதுவொரு தலையிடியாகவும் மாறியிருக்கிறது.
இந்த நிலையில், சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனைகளுக்கு முன்வந்தால் அவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஹுபே மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமக்கு நோயின் அறிகுறிகள் இருப்பதாக முன்கூட்டியே தெரிவித்து பரிசோதனையின் பின்னர் குறித்த நோய் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு சன்மானமாக 10,000 யுவான் (1,425.96 டொலர்) வரை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுபே மாகாணத்தின் தலைநகரான வுஹானிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் (90 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் கியாஞ்சியாங் நகரத்தில், இதுவரை மொத்தம் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹுபேயில் 65,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியும், 2,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு உலகளவில், இறப்பு எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரித்துள்ளதுடன், சுமார் 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த தொற்றுநோய் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் கியாஞ்சியாங் பணிக்குழு, மக்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் நோயறிகுறி இருப்பதாகத் தெரிவித்து அது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு 10,000 யுவான் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என உடனடியாக நிராகரிக்கப்படாதவர்களுக்கு 1,000 யுவான் என்றும், அதே சமயம் “சந்தேகத்திற்கிடமான” என பரிசோதனையில் தெரியவந்தவர்களுக்கு 2,000 யுவான் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சீனாவிலிருந்து மெல்ல கொரோனாவின் தாக்கம் குறைந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு விகிதமும் குறைந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
எனினும், இதற்கான எதிர்ப்பு மருந்தினை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவெளை, உலக நாடுகளுக்கு கொரோனா தாக்கம் சவாலாக மாறிவருதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo