31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதமர்.
இலங்கையின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா அனுராதபுரம் பொது விழையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் சனாதிபதியும் தற்போதைய பிரதருமாகிய மகிந்த ராஜபக்ச கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் முப்படையினரின் இசை அணிவகுப்பும் , அனைத்து மாவட்டங்களில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளின் அணிவகுப்பும். கலாசார நடனங்களும் வான வேடிக்கைகளும் என்று வெகு விமர்சையாக விளையாட்டு விழா ஆரம்பமானது.
தொடர்ந்து இன்றிலிருந்த மூன்று நாட்களுக்கு இளைஞர்களிற்கான விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்ற ஞாயிற்று கிழமை பரிசளிப்புடன் நிறைவுபெறும்.