யாழில் துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்!
புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் மாவட்ட அடிப்படையில் தேசிய மட்டத்தில் மூன்று திட்டங்கள் யாழ்.மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நிறைவான கிராமம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் தலா 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் செயற்திட்டங்கள் மக்களுடைய ஆலோசனைகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டு அமுழ்ப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் கிராமிய வீதிகள், கல்வெட்டுக்கள், சிறிய பாலங்கள், விவசாய உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் களஞ்சிய வசதிகள், வாராந்த சந்தைகள், சிறிய குளங்கள், வாய்க்கால்கள், அணைக்கட்டுகள், விவசாய கிணறு புனரமைப்பு, சமூக குடிநீர் வழங்கல் திட்டங்கல் மற்றும் கிராமிய அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக் கூடிய திட்டங்கள் உள்ளிட்டவை தெரிவு செய்து நிறைவான கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழே நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்றோம்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் சுமார் 689 திட்டங்கள் இனங்காணப்பட்டு அதற்குரிய அனுமதியும் இடைக்கப்பெற்றுள்ளது. இதனுடைய மொத்த செலவீனமாக சுமார் 870 மில்லியன் ரூபாய், இதில் சுமார் 174 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே நாங்கள் இதனை துரிதமாக நிறைவுறுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். இதில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo