காரைக்கால் - யாழ்ப்பாண படகு சேவை விரைவில்!

இந்தியா புதுச்சேரியின் காரைகால் மற்றும் யாழ்ப்பாணத்துக்கிடையேயான படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக ' இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.


அதன்படி இந்த திட்டாமனது எதிர்வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்றைய தினம் புதுச்சேரியில் இடம்பெற்ற இந்திய அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய லொக் சபாவின் எம்.பி. வெ. வைத்தியலிங்கம், ஒரு வழி படகு பயணத்திற்கு சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் ஒரு சுற்று பயணத்திற்கு 6,5000 முதல் 7,000 ரூபா வரை (இந்திய நாணய மதிப்பில்) செலவாகும் எனகூறினார்.

இந்த நிலையில் சில முதலீட்டாளர்கள் ஏற்கனவே இந்த திட்டம் குறித்து ஆர்வமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் யாத்திரை மேற்கொண்டு இந்தியாவுக்கு வழிபாட்டு தலங்களை தரிசிக்கவும் சுற்றுலா தளங்களை பார்வையிடவும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் சுற்றுப் பயணத்தை விரைவுபடுத்தவும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும் இந்த திடடம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னர் இடையே 30 கடல் மைல் தூரத்திற்கு இயக்கப்பட்டது.

எனினும் அதன்பின்னர் 1964 சூறாவளி தனுஷ்கோடியில் உள்கட்டமைப்பை அழித்த பின்னர், இந்த சேவை ராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்பட்ட நிலையில் 1984 ஆம் ஆண்டில், இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகியதன் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் இந்த சேவையை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.