ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பிக்கப்படுகிறது!!
இதற்கான பத்திரம் கைத்தொழில் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உப்பளத்தை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த செயற்பாட்டிற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, புதிய அமைச்சரவை அனுமதியுடன் ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை அரச – தனியார் பங்குடைமையுடன் ஆனையிறவு உப்பளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo