யாழில் இருந்து சென்னைக்கான விமான சேவை ஏழு நாட்களும் இடம் பெறும்

மேலும் யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரியே அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக, பாதக நிலைகள் தொடர்பாக அலையன்ஸ் எயார் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இதன்போது அதிகாரிகள் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதனால் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 7 நாட்களும் சேவை இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது.
இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo