நுவரெலியாவில் இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு!

நுவரெலியா – நேஸ்பீ தோட்டத்தில் பிறந்து ஒரு நாள் நிரம்பிய இரு பெண் சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு நேற்றைய தினம் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் அங்கிருந்த பெண் சிசுவொன்றின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த பொதியொன்றை சோதனையிட்டபோது, பொதிக்குள்ளிருந்த மற்றுமொரு பெண் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

14 நாட்கள் சடலங்களை நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிசுக்களை பிரசவித்த தாய் தொடர்பில் கண்டறியப்படவில்லை என்பதுடன், நுவரெலியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.