டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாகப் பலியான பெண் மருத்துவர்!
கிழக்கு மாகாணத்தில் இளம் பெண் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார்.இந்நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை கிழக்கில் இன்னும் டெங்கினால் இன்னும் எத்தனை மரணங்கள் நிகழப் போகின்றதோ எனக் கவலை வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள், ஒவ்வொரு குடும்பமும் தம்மைச் சுற்றியுள்ள இடங்களை டெங்கு பெருகாதவாறு துப்பரவாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.