கர்ப்பிணி நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகள் மீட்ப்பு!!

இந்தியாவின் தமிழகத்தின் வேலூர் மக்கான் சிக்னல் அருகே, கர்ப்பிணியான தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கியது. அப்போது, அந்த வழியாக வந்த சலவன்பேட்டையைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் நாயை மீட்டு, அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு, நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட டாக்டர் ரவிசங்கர், உடனடியாக ஆபரேஷன் செய்து அந்த நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளை உயிருடன் மீட்டார்.தொடர்ந்து, அருகில் இருந்த கடையில் இருந்து பால் பாட்டில் வாங்கி வந்து, அந்த குட்டிகளுக்கு பால் புகட்டப்பட்டது.

இதுகுறித்து கால்நடை டாக்டர் ரவிசங்கர் கூறுகையில், “நாய் இறந்த ஒரு சில நிமிடங்களில் வயிற்றில் இருக்கும் குட்டிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துவிடும். ஆனால், 5 நிமிடத்தில் ஆபரேஷன் மூலம் குட்டிகள் உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அந்த குட்டிகள் நலமாக உள்ளன.

தெருநாய் தானே என்று அலட்சியமாக விட்டுச் செல்லாமல், அவ்வழியாக சென்ற தண்டபாணி அதை மீட்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவரின் நல்ல உள்ளத்துக்காக நானும் என்னுடைய கடமையை செய்துவிட்டேன். இந்த சம்பவம், இதுவரை நான் கால்நடைகளுக்கு செய்த சிகிச்சைகளில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது” என்றார்.

இதையடுத்து, நாயை மருத்துவமனைக்கு எடுத்து வந்த தண்டபாணியே அந்த 5 குட்டிகளையும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று பராமரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.