அழகிக்கு ஏற்பட்ட விபரீதம்:கண்ணில் ‘டாட்டூ’ போட்ட மாடல்

கண்ணில் ‘டாட்டூ’ போட்ட 25 வயதான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற மாடல் அழகிக்கு பார்வை பறிபோன சம்பவம் போலந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது.


போலாந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா (வயது 25). மாடல் அழகி.

போலந்தை சேர்ந்த பிரபல ராப் பாடகரும், குத்து சண்டை வீரருமான போபெக்கின் தீவிர ரசிகை ஆவார். போபேக் தனது 2 கண்களிலும் கருமை நிற ‘டாட்டூ’ (பச்சை குத்துதல்) போட்டிருப்பார்.

அவரை போலவே கண்ணில் ‘டாட்டூ’ போட்டு முடித்தவுடன், 2 கண்களும் எரிச்சலாக இருப்பதாகவும், வலிப்பதாகவும் அலெக்சாண்ட்ரா கூறினார். ஆனால் ‘டாட்டூ’ போட்ட நபர் சிறிது நேரத்தில் அது சரியாகிவிடும் எனக்கூறி, வலி நிவாரணி ஒன்றை கொடுத்து அலெக்சாண்ட்ராவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

இந்த நிலையில் அலெக்சாண்ட்ரா தனது இடது கண் பார்வையை இழந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவர் டாக்டர்களை அனுகியபோது, கண்ணில் கருமை நிற ‘டாட்டூ’ பரவியதால், இடது கண் பார்வையை திரும்ப பெற முடியாது என கூறிவிட்டனர். மேலும் விரைவில் வலதுபக்க கண்ணிலும் பார்வையை இழக்க நேரிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.