கொரானாவின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

தங்கத்தின் விலை உள்ளூர் சந்தையில் வேகமாக அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதற்கான கோரிக்கை அதிகரிக்கின்றமை, கோரிக்கைக்கு ஏற்ற வகையில் விநியோகம் இல்லாமை போன்ற காரணங்களால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.



இதேவேளை கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் உலகளவில் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்து வரும் நிலையில் தங்கத்தின் விலையிலும் உயர்வை ஏற்படுத்தியது.மேலும், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.