தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ்!

தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


நிதிப் பற்றாக்குறை, மருத்துவர்கள் வெற்றிடம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனை நிர்வகிக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை, ஆளணி வெற்றிடங்கள் காரணமாக மத்திய சுகாதார அமைச்சின் கீழ் தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையைக் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் சுகாதார அமைச்சு பேச்சு நடத்தவுள்ளது.

அங்கு 3 சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுக்கு 6 மருத்துவர்கள் வீதம் 18 மருத்துவர்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.