ஹஜ் யாத்திரை தொடர்பான தீர்க்கமான தீர்மானம் இன்று!

2020 ஹஜ் யாத்திரை தொடர்பான கூட்டமொன்று இன்று(13) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.


ஹஜ் யாத்திரை செயற்பாடுகளை முகவர் மூலமாக முன்னெடுப்பதா அல்லது திணைக்களத்தின் ஊடாக நேரடியாக மேற்கொள்வதா என்பது தொடர்பில் இங்கு தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு, பிரதமரின் பணிப்பின் பெயரில் ஹஜ் கட்டணத்தை 5 இலட்சம் ரூபாவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இது தொடர்பிலும் இன்று இடம்பெறவுள்ள பிரதமருடனான சந்திப்பின் போது முடிவு எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.