மாதம்பிடிய கொலை சம்பவம் – சந்தேக நபரொருவர் கைது!


கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி கிரேண்பாஸ் – மாதம்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் அவர் வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்திற்குரியவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேகத்திற்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Powered by Blogger.