பூஜித்தின் மனுவின் பிரதிவாதியாக மைத்திரி!


கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.

தனக்கு கட்டாய விடுறை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் அரசியல் அமைப்புக்கு முரணானதென தெரிவித்து பூஜித் ஜயசுந்தர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மனு மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
Blogger இயக்குவது.