காதலியுடன் சென்ற இளைஞன் மரணம்!
மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் பெரலபனாத்தர நகரில் தையல் கடை ஒன்றில் கத்தரி கோலால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. தெனியாய கீரவெல்கம விலபட சந்தி பகுதியை சேர்ந்த 21 வயதான அட்டிமாகொட பத்திரனகே கசுன் தனஞ்ஜய என்ற இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் தையல் கடையில் காற்சாட்டை ஒன்றை தைக்க கொடுத்துள்ளார். அதற்கான கட்டணத்தையும் முன் கூட்டியே செலுத்தியுள்ளார்.
காற்சட்டை பெற்றுக்கொள்ள தனது காதலியுடன் கடைக்கு சென்றிருந்த போது, அது தைக்கப்படவில்லை பின்னர் தருவதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.
அப்போது கடை உரிமையாளருக்கும் இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து கடையின் உரிமையார் அங்கிருந்த கத்தரி கோலை எடுத்து இளைஞனின் மார்பில் குத்தியுள்ளார்.
வலி தாங்க முடியாது இளைஞன் ஓடி சென்று வீதியில் விழுந்துள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து இளைஞனை சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் ஊருபொக்க வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இளைஞன் இறந்து விட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.