யாழில் கிராம சேவையாளர்களை ஏமாற்றி மோசடி!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது.


நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் 14 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.


நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தை ஈசி காஸ் மூலம் அனுப்பி வையுங்கள் எனக் கோரியுள்ளனர்.

அதனையடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாயும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈசி காஸ் மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்தக் கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக் கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.