கிளிநொச்சியில் அரசியல் பலத்தால் பல விளைவுகள்!

அரசியல் பலம் இருந்தால் கிளிநொச்சியில் எதனையும் செய்யலாம் என கிளிநொச்சி பிரதேச வாசியான பாறுக் பாயிஸ் தெரிவித்துள்ளார்



இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆட்கள் எனக் கூறி இளைஞன் ஒருவன் அண்மையில் எனது மகன் மீது தாக்குதல் நடத்தி இருந்தார். அதனால் கோபம் கொண்ட நான் அவரை தாக்கி இருந்தேன்.

அது பிழையான விடயம் தான். ஆனாலும் எனது மகன் தாக்கப்படும் போது எந்த அப்பாவும் பார்த்துகொண்டிருக்க மாட்டார். அதனால் அவரை நான் தாக்கினேன்.

அதற்கு கிளிநொச்சி பொலிஸார் என்னை கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிமன்றம் எனக்கு பிணை வழங்கியது.


என் தொடர்பான விடயத்தில் சரியாக செயற்பட்ட கிளிநொச்சி பொலிஸார் எனது மகனை தாக்கியவரை இன்னும் கைது செய்யவில்லை. அவர் சுயாதீனமாக சுத்தி திரிகின்றார்.

இவற்றை பார்க்கும் போது அரசியல் பலம் இருந்தால் எதனையும் செய்யலாமா? என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டும் அல்லாது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரது குழுவினர், என்னை தமிழ் இளைஞர்களுக்கு போதை பொருள் வியாபாரம் செய்வதாகவும், தமிழ் மக்களது காணிகளை அபகரிப்பதாகவும் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

அரசியல் இலாபம் கருதி இனமுறுகலை தோற்றுவிக்க முயல்கிறார்கள். என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் எனது தொழில் என்ன? எனது வருமானம் என்ன என்பது.

இவ்வாறு போதைப் பொருட்களை விற்பனை செய்து வாழ வேண்டும் என்ற எந்த நிலைமையும் எனக்கு இல்லை. நான் ஒரு முஸ்லிம் சமயத்தவன் எனக்கு அதன் சுவைகள் கூட தெரியாது.

அதுமட்டுமின்றி என்னை காணி கள்ளன் என்கிறார்கள். எனக்கு கிளிநொச்சியில் மூன்று காணிகள் உள்ளது. ஒன்று எனது உறவினரின் காணி.

அதற்கு உரிமம் உள்ளது. மற்றயது எனது மனைவியின் தகப்பனாரின் காணி அதற்கும் உரிமம் உள்ளது. அதனைவிட பத்து பேச் காணி ஒன்றை சொந்தாமாக வாங்கி உள்ளேன் அதற்கும் உரிமம் உள்ளது.

இதனை விடக் காணி இருந்தால் அவற்றை இலவசமாக தருகின்றேன. அரசியலுக்காக இன மத முறுகலை தோற்றுவிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்
Blogger இயக்குவது.