திரையுலகிற்கு குட் – பை சொல்ல தயாராகிவிட்டாரா சமந்தா?
நடிகை சமந்தா பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், தொடர்ந்து அவர் மீண்டும் திரையுலகில் நடிப்பாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், திருமணம் முடிந்த ஓரிரு வாரங்களிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், கணவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வத்தையும் வழக்கமாக வைத்திருந்தார். அவ்வப்போது கவர்ச்சிக்கு குறைவில்லாத புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வந்தார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், நேற்று இவர் நடிப்பில் தெலுங்கு ரீமேக் படமான ’96 ‘ வெளியானது.

இந்த படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. திரிஷாவிற்கு இணையாக சமந்தா நடித்துள்ளதாகவும், பத்திரிக்கைகள் விமர்சனம் தந்துள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்துடன் சமந்தா… நடிப்புக்கு சில ஆண்டுகள் முழுக்கு போட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே சமந்தா இதுகுறித்து அரசால் புரசலாக கூறி வந்த நிலையில்… இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளதால் இந்த படத்திற்கு பின் சில காலம் குடும்பத்தை கவனித்து கொள்ள சிறு இடைவெளிக்கு எடுத்து கொண்டு, பின் மீண்டும் நடிக்க துவங்குவார் என கூறப்படுகிறது.

சமந்தாவின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை உள்ளது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo