இஸ்லாமிய மதகுருமார்களை சந்தித்த ரஜினி!!
நடிகர் ரஜினிகாந்துடன் இஸ்லாமிய மதகுருமார்கள் இன்று அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடத்தினர். அதன்பின் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இந்த சந்திப்பு தொடர்பாக ஒரு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ``ஜமாஅத்துல் உலமாவின் நிர்வாகிகளை மிகுந்த மரியாதையோடு வரவேற்ற ரஜினிகாந்த் எங்களின் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா முழுக்க சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சம்மந்தமாக முஸ்லீம்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் எழுந்துள்ள அச்சத்தின் நியாயங்களை அவருக்கு விளக்கிச் சொன்னபோது அது சரிதான். அதில் நியாயம் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
அத்தோடு இந்த அச்சத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் தங்களைப் போன்ற மதகுருமார்கள் தீர்மானித்து சொன்னால், நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் அகன்று அமைதி ஏற்பட தன்னால் இயன்ற அனைத்தையும் உங்களோடு சேர்ந்து செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo