மலேசியாவில் ஒரு வாரகாலமாக அரசியல் நெருக்கடி!

கடந்த 24 ஆம் திகதி 94 வயதான மகாதீர் முகமது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தமையினை அடுத்து மலேசியாவில் ஒரு வாரகாலமாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


2018 தேர்தலில் வெற்றிபெற்ற72 வயதான அன்வர் இப்ராஹிம் உடனான கூட்டணியுடன் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்தது அவர் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தனது கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்க போவதாகவும், நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார். அந்த கூட்டணியின் சார்பில் இது தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று வரும் மே மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ஆட்சி பொறுப்பை இப்ராஹிமிடம் வழங்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

ஏபெக் மாநாட்டுக்கு பிறகே தம்மால் பதவி விலக இயலும் என மகாதீர் முகமது கூறியதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மகாதீர் முகமது அதிருப்தியில் இருப்பதாக அண்மையில் தகவல் பரவியது. இதனால் அன்வரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் புதிய ஆட்சி அமைப்பார் என்றும் கூறப்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக பிரதமர் மகாதீர் முகமது, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னருக்கு அனுப்பி வைத்திருந்ததார்.

இந்நிலையில், மலேசிய மன்னரின் உத்தரவை ஏற்று, அந்நாட்டின் 8-வது பிரதமராக முஹைதீன் யாசின் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.