லண்டனில் உயிரிழந்த முன்னாள் போராளி - விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தமிழ் இளையோரின் நிலை என்பது இன்று மிகவும் கவலைக்குரியதாக மாறிக்கொண்டிருக்கின்றது.


லண்டனில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவர்  முன்னாள் போராளியென சந்தேகப்படுவதுடன் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு தமிழ் சமூக நடுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அன்பான எம் மக்களிடம் ஓர் வேண்டுகோள்

இப்படத்திலிருப்பவர் ஜெயகாந் லட்சுமிகாந் .இவர் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் ஈலிங் பகுதியில் காலமானார்.இவரின் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள்,நண்பர்கள் என யாரேனும் இருந்தால் அறியத்தரவும்.இவர் ஒரு முன்னாள் போராளி எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ் சமூக நடுவமாகிய நாங்கள் லண்டனில் உள்ள நகரசபையின் வேண்டுகோளுக்கமைய எமது சேவைகளை அன்னாருக்கு கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக வழங்கியிருந்தோம்.அவ்வேளை அவர்பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எம்மால் பெறமுடியவில்லை காரணம் அவர் மிகவும் உளரீதியாக பாதிப்படைந்திருந்தார்.



கடந்த டிசம்பர் மாதம் இவர் மரணமடைந்துள்ளதாகவும் இவரது உடல் ஈலிங் மருத்துவமனையில் உள்ளதாகவும் அதனை அவரது குடும்ப உறவுகள் யாருக்கேனும் தெரியப்படுத்துமாறு எம்மிடம் கோரப்பட்டது.

அதற்கமைய நாம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம் ஆனால் எமக்கு இதுவரை உரிமைகோரி எவரும் தொடர்புகளை மேற்கொள்ளவில்லை.

இவரை அறிந்தவர்கள் தயவு செய்து எமது தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ தகவல் தருமாறு வேண்டிக்கொள்கிறோம் .

தொடர்புகட்கு.

தமிழ் சமூக நடுவம்.

Email:tccentre@gmail.com

Mobile:07947 816273

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.