கேரள பாதிரியாருக்கு அதிர்ச்சி கொடுத்த போப் ஃபிரான்சிஸ்!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நீண்டுநோக்கி (Neendunoki) புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் பாதிரியாராகவும் பள்ளிக்கூட நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தவர் ராபின் வடக்கும்சேரி.


இவர் பணியாற்றிவந்த காலத்தில் அதாவது 2016-ம் ஆண்டு அந்தப் பள்ளியில் படித்த 16 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இதனால் சிறுமி கருவுற்றுள்ளார். பிறகு 2017-ம் ஆண்டு உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்குக் குழந்தை பிறந்தவுடன்தான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்தத் தகவல் சர்ச்சையாகவும் உருவெடுத்தது. தன்னைப் பற்றிய தகவல் வெளியானதும் பாதிரியார் ராபின் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட முயன்றார், ஆனால், கொச்சி விமான நிலையத்தில் அவரைச் சுற்றிவளைத்த காவலர்கள் அங்கு வைத்தே கைது செய்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ராபின் வடக்கும்சேரி

இந்த வழக்கு விசாரணை தலச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராபினின் மரபணுவும் சிறுமிக்குப் பிறந்த குழந்தையின் மரபணுவும் ஒத்துப்போனதால் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. அவர் செய்த இந்தக் கொடூர குற்றத்துக்காக அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது தலச்சேரி நீதிமன்றம்.

இந்த நிலையில் ராபின் வடக்கும்சேரியை, பாதிரியார் என்ற தகுதியின் அடிப்படையில் மதரீதியில் கடமை ஆற்றும் பணிகளிலிருந்து நீக்கி போப் ஃபிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

`இனிமேல், அவருக்கு எந்தச் சமய உரிமைகளும் கடமைகளும் இல்லை. அவர் ராபின் வடக்கும்சேரி என்று மட்டுமே அழைக்கப்படுவார்’ என கத்தோலிக்க திருச்சபையின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் கோசாரக்கல் தெரிவித்துள்ளார்.

ஒரு பாதிரியார் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவது மிகக் கடுமையான தண்டனை மற்றும் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு போப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.