ஜோதிகாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

திருமணத்திற்குப் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. கடந்த ஆண்டு அவர் நடித்த ’ராட்சசி’ ’ஜாக்பாட்’ மற்றும் ‘தம்பி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’பொன்மகள் வந்தாள்’


ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கே பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப்போத்தன், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்மகள் வந்தாள் படத்தின் போஸ்டரே வித்தியாசமாக இருப்பதால் இந்தப் படமும் ஜோதிகாவின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.