பெரும்பான்மையினப்பெண் ஒருவரின் தலைகுனிவான செயல்!!

முஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார்.


கடையின் சொந்தக்காரர் அந்த விலைக்குத் தரமுடியாது என்று கூற, வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வைத்துவிட்டு “ஹலால்” பற்றியும் ஏதோ கூறிவிட்டுக் கோபமாக வெளியேறிச் சென்றுள்ளார்.

வெளியே சென்ற அவசரத்தில் அவரது பணப்பை இருந்த ஒரு பொதியை அவர் கையில் எடுத்துச் செல்ல மறந்து விட்டார்.

பல மணித்தியாலங்களின் பின் திரும்பி வந்த அப்பெண் தான் விட்டுச் சென்ற பொதியை விசாரித்துள்ளார். அதில் 48 ஆயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது.

முஸ்லிம் வியாபாரி அந்தப் பொதி பற்றி எனக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கூறியிருக்கலாம்.

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அந்தப் பணத்தை அப்பெண்ணுக்கு திருப்பிக் கொடுத்த வியாபாரி சொன்ன செய்தி இதுதான்.

“நீங்கள் எனது வியாபாரப் பொருளின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தினீர்கள். அதில் கிடைக்கும் இலாபம்தான் எனக்கு “ஹலால்” (ஆகுமாக்கப்பட்டது). இந்த 48 ஆயிரம் உங்களுடையது அது எனக்கு “ஹராம்” (தடை செய்யப்பட்டுள்ளது).

இஸ்லாத்தின் இந்த உன்னதமான கொள்கையை நான் பின்பற்றுவதால்தான் உங்களது பணத்தைக் கிடைக்க உங்களுக்கு நன்மை செய்கிறேன்.

நீங்கள் எனது கடையில் பொருள் வாங்காவிட்டால் அது உங்களது விருப்பம். அதற்காக உங்களது பணத்தை நான் அனுபவிக்க முடியாது. இதோ உங்களது பணம் பெற்றுக் கொள்ளுங்கள்.”

இதுதான் நாங்கள் கூறும் ஹராம்-ஹலால் என அந்த கடைக்காரர் கூறியதும் வெட்கித்தலைகுனிந்தார் அந்த பெண்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.