அதிரடி உத்தரவை பிறப்பித்தார் கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒளிப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் ஒளிப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அவ்வாறு செய்வதினை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிநபர் பிரபல்யத்தை தான் விரும்பவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.