பாரிய இழப்பைச் சந்தித்துள்ள கொரோனா பியர் நிறுவனம்!!

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் கொரோனா பெயரில் பியர் வைத்திருக்கும் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் பாரிய இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


கொரோனா பியர் தவிர, இந்நிறுவனம் உலக புகழ்பெற்ற பல பியர் பிராண்டுகளையும் கொண்டுள்ளது.

அண்மையில் சீனாவின் புதிய சந்திர ஆண்டு பிறந்த நிலையில் பெரிய அளவில் பியர் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில்,அது நிகழாததால் நிறுவனம் 170 மில்லியன் டொலர் திட்டமிடப்பட்ட வருவாயை இழந்துள்ளது.

இந்த இழப்புகள் அதன் சீன நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை போனஸைக் குறைக்கவும், அதன் காலாண்டு இலாபங்களில் பெரும் வீழ்ச்சியைக் கணிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பொது இடங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் பியர் விற்பனையில் இலாபங்கள் குறைந்துவிட்டதாக நிறுவனம் நம்புகிறது.

இதேவேளை பல மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களை மூட சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.