ஸ்ரீகொத்தவுக்கு அருகில் அலுவலகம் திறக்கும் சஜித்!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனிவழிப் பயணத்தை நேற்று தொடங்கியதால் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம்.


இந்நிலையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தி பொது எதிரணியினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையமான ஸ்ரீகொத்தவுக்கு அருகாமையிலேயே தமது அலுவலகம் ஒன்றை திறந்துள்ளனர்.

ஏட்டிக்குப் போட்டியான சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடானது ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள பலருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாளை தனது அலுவலகத்தை சஜித் பிரேமதாஸ திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.