கொழும்பில் ரஷ்யக் கடற்படையின் இரு கப்பல்கள்!!

ரஷ்யக் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.


யரோஸ்லவு மட்ரி (Yaroslav Mudry) மற்றும் விக்டர் கோனெட்ஸ்கி (Victor Konetsky) ஆகிய கப்பல்கள் நேற்று (புதன்கிழமை) கொழும்பிற்கு வந்தநிலையில் இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு வந்த இக்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் விக்ட வெசிலியேன்விச் கோஸ்ட்ரியுகோவ் (Victor Vasilyevich Kostriukov) மற்றும் கப்டன் மிகாயில் அலெக்ஸாண்ட்ரோவிச் (Mikchail Aleksandrovich) உட்பட அதிகாரிகள் மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்ன பரிமாற்றமும் நடைபெற்றது.

இந்தக் கப்பல்களில் வந்த அதிகாரிகள், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்கின்ற கலாசார நிகழ்வுகள் மற்றும் இலங்கையின் முக்கியமான இடங்களில் சுற்றுப் பயணங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த 3 நாட்கள் விஜயத்தின் பின்னர் 6ஆம் திகதி அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.