பிரபல நடிகரின் தம்பி தற்கொலை!!
தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகரான ஆனந்தராஜ் சகோதரர் 50 கோடி ரூபாய் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஆனந்தராஜின் இளைய சகோதரர் கனகசபை. 55 வயதான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர் புதுச்சேரியில் வாழ்ந்து வரும் நிலையில் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது
இந்த ஏலச்சீட்டில் அவருக்கு கடன் ஏற்பட்டதாகவும், ரூபாய் 50 கோடி வரை கடன் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கனகசபை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் உடனடியாக அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கண்டுபிடித்தனர். அதில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் 50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், சீட்டு கட்டியவர்கள்தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது
மேலும் இந்தக் கடிதத்தில் புதுச்சேரியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலரது பெயர் இருப்பதாக கூறப்படுவதால் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo