ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி போனது மக்கா!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வரலாற்றிலேயே முதல்முறையாக, மெக்காவிலுள்ள பெரிய மசூதி பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


உலகிலேயே அதிகமான மக்கள், ஆன்மீக யாத்திரை செல்லக்கூடிய புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் புனித பயணம் மேற்கொள்வதற்கு சவுதி அரேபியா கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆள் அரவமின்றி காட்சி அளிக்கக்கூடிய இடமாக மாறியுள்ள பெரிய மசூதி பகுதியை தற்போது, பலரும் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எனினும், மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை இரத்து செய்யப்படவில்லை. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடைபெற்ற போதிலும்கூட வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது என்று அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்ஸாம் புனித நீர் கிணறும் மூடப்பட்டுள்ளது. வழிபாட்டாளர்கள் உணவு அல்லது தண்ணீர் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். இஸ்லாமிய நம்பிக்கையில் நடைமுறையில் உள்ள இடிகாஃப் நிறைவேற்றும் பொருட்டும் கூட, வழிபாட்டாளர்கள் மசூதியில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு சவுதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், சீனா, சீன தைபே, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், தென் கொரியா லெபனான், மக்காவோ, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, சிரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், யேமன் ஆகிய நாடுகளில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் சவுதிக்குள் நுழைய முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

இதேபோல, விமான சிப்பந்திகளும், சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வளைகுடா கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி தேசிய அடையாள அட்டையுடன் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் கண்டிப்பாக தங்கள் கடவுச்சீட்டுடன் வந்தாக வேண்டும். சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், மீண்டும் தாய்நாடு திரும்பி வரும்போது, தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு வந்து கொள்ளலாம். அவர்களுக்கு கடவுச்சீட்டு விதிமுறை பொருந்தாது.

உயிர்களை காவுகொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சவுதி அரேபியாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.