அமோக விற்பனையில் சைவ முட்டை -சீனாவில் கொரோனா விளைவுகள்!
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஒவ்வொரு நாடும் ஆராய்ந்துகொண்டிருக்கிறது. 3,000க்கும் மேற்பட்ட மக்களை சீனாவில் கொன்றழித்த இந்த வைரஸ், வூஹான் நகரத்திலுள்ள ஹுவானன் கடல்வாழ் உயிரின மொத்தவிற்பனைச் சந்தையிலிருந்து மனிதர்களுக்குப் பன்றிகள், எறும்புண்ணி வகை (pangolins), புனுகுப் பூனை மூலமாகப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால், வன விலங்குகளை உணவாகச் சாப்பிடுவதற்கு சீன அரசு நிரந்தரத் தடை விதித்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டுவிட்டால், அந்தத் தொழில்துறையில் சுமார் 74 பில்லியன் டாலர் இழப்புவரை உண்டாக்கும்.
கடந்த ஆண்டு, ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சலின் காரணமாக சுமார் 300 மில்லியனுக்கு மேற்பட்ட பன்றிகளைக் கொன்றழித்த விளைவுகளை, சீனா இப்போது எதிர்கொண்டு வருகின்ற நிலையில், COVID-19-ஐ யும் மனிதர்களிடம் பரப்புவதில் முக்கியக் காரணியாக இருக்கும் பன்றிகள் இந்தத் தடைக்கு உட்படவில்லை.
கொரோனா உறுதிசெய்யப்பட்ட பெங்களூரு இளைஞரின் நண்பருக்கும் அறிகுறிகள் #CoronaIndiaUpdates
மேலும், இந்தத் தடை நீர்வாழ் உயிரினங்கள், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு இல்லை. இறைச்சிக்குப் பதிலான தாவர மாற்றுகளை உற்பத்தி செய்யும் நீண்ட வரலாற்றை சீனா கொண்டிருந்தாலும் பன்றி இறைச்சிக்கான அத்தகைய தாவர மாற்றுகளுக்குச் சமீபத்திய ஆண்டுகளில்தான் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
JUST உணவுத்தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஷ் டெட்ரிக், பாசிப்பயறு கொண்டு முட்டை தயாரித்து, அதை சைவை முட்டையாக விற்பனை செய்து சீன மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றார். இது ஏற்கெனவே சில சீன விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது என்றாலும், கொரோனா பரவலுக்குப் பிறகுதான் இதன் விற்பனை அதிகரித்துள்ளது.
'இப்போது பல பிரபல தனியார் உணவு உற்பத்தி நிறுவனங்களும் எங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்ள விரும்புகின்றன. அதில் மாநில அரசு நிறுவனங்களும் அடக்கம்' என ப்ளூம்பெர்க்(Bloomberg) நிறுவனத்திடம் ஜோஷ் டெட்ரிக் கூறியிருக்கிறார்.
சைவப் பன்றி இறைச்சி தயாரிப்புகளான ஆம்னிபோர்க்(Omnipork), ஆம்னிமின்ஸ்(Omnimince) ஆகியவற்றை
தொழில்முனைவோர் டேவிட் யியுங்(David yeung), தனது பிராண்ட் ரைட் ட்ரீட்(Brand Right Treat) மூலம் மெயின் லாண்ட் என்னும் ஊரில் சென்ற வருடத்தின் கடைசியில் தொடங்கினார். சீனாவில் இது பெரிய வரவேற்பைப் பெற்றது.
'காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பொது சுகாதாரப் பிரச்னைகளின் விளைவுகளால், கிரகத்தின் வரலாற்றில் நாம் மிக ஆபத்தான சந்திப்பில் இருக்கிறோம்' என்று 2018-ம் ஆண்டு நடந்த மாநாடு ஒன்றில் யியுங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'இந்தத் தீவிர அசைவ உணவுப் பழக்கத்தை இதற்கு மேலும் நாம் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பேராபத்தை நோக்கி நகர்வோம்' என்ற மனநிலைக்குக் கொரோனா சீன மக்களை இப்போது கொண்டுவந்திருக்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo