இலங்கையில் 50 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகளுக்கு பூட்டு!!

கொரோனா வைரஸ் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­தையும் ஆட்டிப் படைக்கும் நிலை ஏற்பட்டுள்­ளது. பெரும்­பா­லான மூலப்­பொருட்கள் சீனா­வி­லி­ருந்தே இலங்­கைக்கு இறக்குமதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன.


அந்தவகையில் இலங்­கையின் ஆடை உற்­பத்­திக்குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­களை சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி கார­ண­மாக இங்­குள்ள பிர­ப­ல­மான சுமார் ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட ஆடை உற்­பத்தி நிலை­யங்­களை தற்­கா­லி­க­மாக மூட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அங்கு தொழில் புரிந்த ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது.

இது குறித்து கருத்து தெரி­வித்­துள்ள ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் ரொஹான் ல­க் ஷானி, தற்­போது ஏற்­பட்­டுள்ள கொரோனா அச்சம் கார­ண­மாக இலங்­கையின் ஆடை உற்­பத்­திக்குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­களை சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் பெரும் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட ஆடை உற்­பத்தி நிலை­யங்­களின் உற்­பத்தி நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றில் சில நிலை­யங்கள் இம் மாதம் முதல் தற்­கா­லி­க­மாக மூடப்­ப­ட­வுள்­ள­துடன், ஏனை­யவை ஏப்­ரல் மாத விடு­மு­றையின் பின்னர் மூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

இதனால் எதிர்வரும் மே மாதம் அளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.