மக்கள் உயிர் மீது அக்கறை காட்டிய மட்டக்களப்பு இளைஞர்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இலங்கை வங்கிக்கிளைக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியை மோட்டார் சைக்கிள்களில் கடக்கும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக குறித்த பகுதியால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணிகள் போக்குவரத்து பொலிஸாருக்கு பயந்து அவசரமாக செல்வதினால் பயணிகள் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்ட அப்பிரதேச இளைஞரான மிப்ராஸ் என்பவர் அவ்விடத்தில் தலைக்கவசம் ஒன்றினை வைத்து அது தொடர்பான விளக்கத்தையும் காட்சிப் படுத்தியுள்ளார்.
குறித்த வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் நபர்கள் அவ் இடத்தில் வைக்கப்பட்டுள்ள தலைக்கவசத்தை அணிந்து விபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக வேண்டியே இவ் ஏற்பாட்டினை செய்துள்ளாதாக மிப்ராஸ் என்ற இளைஞன் கூறுகிறார்.
மோட்டார் சைக்கிள் பயணிகள் குறித்த தலைக்கவசத்தை அணிந்து கொண்டு தங்களின் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் தலைக்கவசத்தை குறித்த இடத்தில் வைத்துவிட்டுச் செல்வதினால் அது இன்னொருவருக்கு உதவும் எனத் தெரிவித்த அவ் இளைஞன் எதிர்காலத்தில் இன்னும் பல தலைக்கவசங்களை அவசரத் தேவையாளர்களுக்கு அவ்விடத்தில் வைக்கவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo