அஜித்தின் தம்பியாக தமிழ் நடிகரின் மகன்!!

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது என்பதும் கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அஜீத் நடித்த முதல் படமான ’அமராவதி’ திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த பானு பிரகாஷ் என்பவரின் மகன் ராஜ் அய்யப்பா என்பவர் ’வலிமை’ படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் அஜித்தின் சகோதரராக இந்த படத்தில் நடித்து வருவதாக படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது. ராஜ் அய்யப்பா ஏற்கனவே அதர்வா நடித்த ’100’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அஜித் ஜோடியாக இந்த படத்தில் ’காலா’ நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி நடிப்பார் என்றும் அதேபோல் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.