இலங்கையின் பல மாவட்டங்களில் நாளை அதிகூடிய வெப்பம்!!

மேல், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிகளவிலான வெப்பநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


அதற்கமைய குறித்த பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) இவ்வாறு அதி உயர் வெப்பநிலை நிலவும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





Blogger இயக்குவது.