அக்காவின் சங்கிலி அறுக்க அடியாட்கள் அனுப்பிய தம்பி!!
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கடந்த சில தினங்களிற்கு முன்னர் ரௌடி குழுவொன்று நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தது, அந்த வீட்டில் இருந்த இளைஞனும், நண்பர்களும் கரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கரம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞனின் நண்பனின் மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்து யுவதி அணிந்திருந்த சங்கிலியையும் அறுத்துள்ளார்கள். பின்னர், வீட்டு இளைஞனின் நண்பன் ஒருவனின் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது, வீட்டு இளைஞனிற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பையடுத்து இளைஞனின் ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய மாற்றத்தை அவதானித்த பொலிசார், தொலைபேசியை அவுட் ஸ்பீக்கரில் விட்டு பேசும்படி அறிவுறுத்தினர்.
இதன்போது மறுமுனையில் இருந்து பேசிய குரல், “மச்சி பைக் கோயிலடியில் நிற்குது. போய் எடு என குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து அந்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த திருட்டின் பின்னணியில் வீட்டு இளைஞனே இருந்தது தெரிய வந்தது.
அவரை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில் பல திக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நண்பர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்திருந்தது, அந்த இளைஞனிற்கு ஏற்பட்ட விரக்தியையடுத்து, அந்த மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு
திட்டமிட்டுள்ளான். இதற்காக பாசையூரைச் சேர்ந்த தனது நண்பர்களான சிலரை செற் பண்ணி இந்த திருட்டு முயற்சியை அரங்கேற்றியுள்ளான்.
கொள்ளையடித்த மோட்டார் சைக்கிள் அருகிலுள்ள ஆலயமொன்றிற்கு அருகில் விட்டுவிட்டு, அந்த இளைஞனையே எடுக்கும்படி கூறியபோது சிக்கியுள்ளனர்.
தமது பணத்தேவைக்காகவே, தனது சகோதரியின் தங்கச்சங்கிலியை அறுக்கும்படி கூறியதாக இளைஞன் தெரிவித்தது பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தது.
குறிப்பிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது,
இதேவேளை, இளைஞனால் ஒழுங்கு பண்ணப்பட்ட பாசையூர் ரௌடிகள் இதுவரை கைது செய்யப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo