மட்டக்களப்பை சுடுகாடாக்காதே- சட்டத்தரணிகள் போராட்டம்!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு சட்டத்தரணிகள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஸ்கரித்த சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘கொரோனா வைரஸ் மட்டக்களப்புக்கு வேண்டாம்’, ‘கொரனாவிற்கு கிழக்குதான் இலக்கா?’, ‘மட்டக்களப்பினை சுடுகாடாக்காதே’, ‘கொரனாவிற்கு கிழக்குத்தான் இலக்கா’ போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்பாடானது, மட்டக்களப்பு மாவட்டத்தினை முற்றுமுழுதாக பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிக ஆபத்தான கொரோனா வைரஸானது, மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தலாக மாறியுள்ள இத்தருவாயில், உயிர்கள் பல பறிக்கப்பட்டுள்ள சூழலில் உலக மக்களுடன் சேர்ந்து, தமிழர்களாகிய நாமும், இந்நோயினை எதிர்த்துப் போராடத் தயாராகவே உள்ளோம்.
ஆனாலும், ஓர் தொற்றுநோயினை கையாள்வதற்கு அல்லது இன்னும் சிறப்பாகச் சொல்லப் போனால், மருத்துவ ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது என்பது, பிரதானமானதொரு விடயமாக இங்கே இருக்கிறது.
இவ்வாறானதொரு சூழலில் இந்நோயாளிகளை பராமரிப்பதற்காக தீர்க்கதரிசனத்தோடும், புத்திசாதுரியத்துடனும் இடத்தேர்வு அமைவது முக்கியதொரு அம்சமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சுகாதார அமைச்சும், எமது ஆட்சியாளர்களும் மட்டக்களப்பு மாநகரத்தில் அமைந்துள்ள போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரிப்பதற்கான இடத்தேர்வானது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மிகவும் செறிவாக வாழுகின்ற பிரதேசமாக மாத்திரமன்றி, தாதியர்களுக்கான போதனா வைத்தியசாலையாகவும், ஆயிரக்கணக்கான தாதியர்கள் தங்கியிருக்கின்ற சூழலிலும், போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் மட்டக்களப்பு சிறைச்சாலை அமைந்திருப்பதும், இதனைச் சூழவுள்ள பகுதிகளில் எமது மக்களின் வழிபாட்டுத் தலங்களும், நெருக்கமான வீடுகளும் அமைந்துள்ள சூழலில் இங்கே நோயாளிகள் பராமரிக்கப்படுவது என்பது மிகவும் அறிவிலித்தனமான முடிவும், உள்நோக்கம் கொண்டதாகவும் பார்க்கத் தோன்றுகிறது. இதனை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் உறுதியுடன் எதிர்ப்பதற்கு உடனடியாக முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் போராலும், இயற்கை அழிவுகளாலும் எமது இனம் நொந்துபோயுள்ள இத்தருவாயில், நோயினாலும் நாம் மடிவதற்குத் தயாரில்லை. ஆகவே, எமது அன்பார்ந்த மக்களே! வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது எம் தமிழ் இனமாக இருக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொண்டு, உங்கள் கரங்களை இணைத்து உறுதியுடன் போராட முன்வாருங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo