கொரோனா அச்சம் வடக்கில் வேண்டாம்- வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி!!

இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார்.


எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பது  உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு,  எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை , கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே வடக்கினை பொறுத்த வரைக்கும் அவ்வாறு  ஒருவருக்கு கூட தொற்று ஏற்பட வில்லை எனவே வடக்கு மக்கள் கொரோனா தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.

தேவையற்ற விதத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை எனவே இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு மக்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.