வடக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தற்காலிகத் தடை!
வடக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் விடுத்த கோரிக்கைக்கு வடக்கு ஆளுநர் சம்மதித்துள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக வடக்கு ஆளுநர் P.S.M. சார்ள்ஸூக்கு இன்று யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து வடக்கில் தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், “உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முழு உலகமும் பேசிக்கொண்டிருக்கின்றது.
குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அந்தந்த அரசுகள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகின்றமையை அறிவோம். அந்த வகையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக எச்சரிக்கையாக முன்னேற்பாடாக மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அனைத்துப் பாடசாலைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பின் எதிர்பார்ப்பான மாணவர்களைப் பாதுகாக்கும் முன்னேற்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் தனியார் கல்வி நிலைய கற்றல் நடவடிக்கைகளையும் பாடசாலை மீள் ஆரம்பம் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதுதான் பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
எனவே எதிர்வரும் 13.03.2020 ஆம் திகதி தொடக்கம் 20.04.2020 ஆம் திகதி வரை தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி மாணவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபத்தில் இருந்து எமது மாணவ சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்விஅமைச்சு அறிவித்துள்ளது.
எனவே, மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறுஅறிவித்தல் வரும்வரை விடுமுறையளிப்பதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடைமுறைப்படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo