யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தல்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந் நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையிலுள்ள வீதிகள், யாழ். மாவட்டச் செயலக உட்புறத்தில் உள்ள பகுதி உள்ளிட்ட பகுதிகளில், பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மோப்ப நாய்களும் கொண்டுவரப்பட்டு, சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் , தீயணைப்புப் படை வீரர்களும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை இன்றிலிருந்து மார்ச் 19ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.